தென்னிந்திய சினிமா

தொழில​திபரை மணக்​கிறாரா அனுஷ்​கா?

ப்ரியா

தமிழ், தெலுங்​கில் நடித்து வரும் அனுஷ்​கா​ஷெட்டியின் திரு​மணம் பற்றி அடிக்​கடி செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இவர் நடிகர் பிர​பாஸை காதலித்து வரு​வ​தாக​வும் இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் ஏற்​கெனவே செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன. இதை இரு​வருமே மறுத்​தனர். பின்​னர் தெலுங்கு இயக்​குநர் ஒரு​வரை அவர் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாகக் கூறப்​பட்​டது. அதை​யும் அவர் மறுத்​திருந்​தார்.

இந்​நிலை​யில் இப்​போது பெங்​களூருவைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வருடன் அவருக்​குத் திரு​மணம் நடக்க இருப்​ப​தாக​வும் அவர் அனுஷ்​கா​வின் தூரத்து உறவினர் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. திருமண ஏற்​பாடு​கள் குறித்த ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. அனுஷ்கா தரப்​பில் இதை உறு​திப்​படுத்​த​வில்​லை.

          
SCROLL FOR NEXT