நடிகை அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தனுஷின் கொடி, துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பல யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் தனது பதிவில், “இன்றிலிருந்து, எனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை. இனி பயமும் இல்லை. நானே என் சுயத்தைத் தேடிக் கண்டடைகிறேன். ஒரு காலத்தில், என்னுடையது என்பதை மறந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்குகிறேன்.
நான் மீண்டும் என்னிடம் திரும்பி வருகிறேன். நீண்ட காலமாகச் சொல்ல விரும்பிய ஒரு விஷயம் இருக்கிறது, சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த விஷயம் இதுதான், ‘உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’. எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை மிகுந்த அன்பால் நிரப்பியதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அனுபமா இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதை அடுத்து அனுபமா இப்படிப் பகிர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.