நடிகை ரேவதி

 
தென்னிந்திய சினிமா

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரேவதி, பத்மபிரியா விலகல்

வேட்டையன்

திருவனந்தபுரம்: மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’-வின் அடிப்படை உறுப்பினராக தொடர விரும்பவில்லை என நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’வுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்வேதா மேனன் தலைவரானார்.

‘அம்மா’வின் வரலாற்றில் அதன் முதல் பெண் தலைவராக அவர் பொறுப்பேற்றார். இந்நிலையில் இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தலைவர் ஸ்வேதா மேனன், பொதுச் செயலாளர் குக்கு பரமேசுவரன் உள்பட 17 நிர்வாகிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து ரமேஷ் பிஷாரோடி எம்.எல்.ஏ தலைமையில் தற்காலிகக் குழு (அட்-ஹாக் கமிட்டி) அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சங்கத்தின் அடிப்படையில் உறுப்பினராக தொடர விரும்பவில்லை என ரேவதி, பத்மபிரியா அறிவித்துள்ளனர்.

“அம்மா-வில் இப்போது அரங்கேறும் விலகல் படலத்தின் மற்றொரு அத்தியாயமாக இது தெரியலாம். ஆனால், இந்த முடிவு அப்படியானது அல்ல. எங்கள் விலகல் முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டது அல்ல. இதற்கு தனியொரு சம்பவம் மட்டும் காரணமல்ல.

இந்த சங்கத்தில் இருந்து நாங்கள் எதிர்பார்த்தது எளிதானது தான். அது பாதுகாப்பு, கண்ணியம், பொறுப்பு மற்றும் அனைவருக்கும் சமமான அணுகுமுறை. ஆனால், எங்களுக்கு கிடைத்தது வெறும் அமைதி மட்டுமே. அவர்கள் மாற்றத்துக்கு தயாராக இல்லை.

மலையாள சினிமாவை நாங்கள் நேசிக்கிறோம். அது உறுப்பினர் என்ற அடையாளத்தை சார்ந்தது அல்ல. உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறோம்” என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT