தென்னிந்திய சினிமா

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

நிலா

தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்​குத்​து’, தெலுங்​கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்​கிள்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கார்த்​திக் ராஜு, அடுத்து இயக்​கும் படம் ‘வெல்​கம் டு வைல்டுலைஃப்’.

இதில் சிவ ராஜ்கு​மார் ஹீரோ​வாக நடிக்​கிறார். கன்​னடத்​தில் உருவாகும் இப்​படம் தெலுங்​கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக இருக்​கிறது. இந்த திரைப்​படத்தை கேவிகே புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்​கிறார்.

இதன் முதல் தோற்ற போஸ்​டரை சிவ ராஜ்கு​மார் மற்​றும் கீதா சிவ ராஜ்கு​மார் இணைந்து வெளி​யிட்​டனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் குறித்த விவரங்​கள் விரை​வில் வெளியாகும் என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT