நடிகர் ஷர்​வானந்த்

 
தென்னிந்திய சினிமா

‘பைக்​கர்’ படத்​துக்​காக 22 கிலோ எடை குறைந்த ஷர்​வானந்த்!

ப்ரியா

ஷர்​வானந்த், டாக்​டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல் கர்னி நடித்​துள்ள பான் இந்​தியா திரைப்​படம், ‘பைக்​கர்’. இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்​பட​மாக உருவாகியுள்ள இதை அபிலாஷ் ரெட்டி இயக்​கி​யுள்​ளார்.

ஜிப்​ரான் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு மதி ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். யுவி கிரியேஷன்ஸ் சார்​பில் விக்​ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்​றும் பிரமோத் உப்​பல​பாட்டி தயாரித்து உள்​ளனர். ஏப்.3-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடந்​தது. படக்குழுவினர் கலந்​து​கொண்​டனர்.

          

நடிகர் ஷர்​வானந்த் கூறும்​போது, “‘எங்​கே​யும் எப்​போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்​களு​டன் எனக்கு எப்​போதும் நெருக்​கம் இருந்​திருக்​கிறது. என் திரைப்​பயணத்​தைப் பார்த்​தால், ஒவ்​வொரு படமும் புதிய ஜானரில் அமைந்​திருப்​ப​தைக் காணலாம். அதே​ போல், ‘பைக்​கர்’ படமும் என் திரைப்​பயணத்​தில் முக்​கிய​மான இடத்​தைப் பெற்​றுள்​ளது. என் முழு திரை வாழ்க்​கை​யிலேயே இது​தான் எனது சிறந்த படம் என்று பெரு​மை​யுடன் சொல்ல முடிகிறது.

இது இந்​திய சினி​மா​வில் உரு​வான முதல் ‘மொட்​டோகி​ராஸ்’ (மோட்​டார் சைக்​கிள் பந்​த​யம்) திரைப்​படம். இந்​தப் படம் தொழில்​நுட்ப ரீதி​யாக​வும், உணர்ச்சி ரீதி​யாக​வும், பெரிய முயற்​சி​யாக உரு​வாகி​யுள்​ளது. இந்​தக் கதா​பாத்​திரத்​துக்​காக 22 கிலோ எடை குறைத்​து, 18 வயது இளைஞ​னாக​வும் 30 வயதுள்​ளவ​ராக​வும் இரு பரி​மாணங்​களில் என்னை மாற்​றிக் கொண்டேன். இது என்னை நடிக​ராக மட்​டும் அல்ல, மனித​ராக​வும் மாற்​றிய திருப்​பு​முனைப் படமாக அமைந்​துள்​ளது” என்​றார்.

SCROLL FOR NEXT