தென்னிந்திய சினிமா

‘பெத்​தி’ படப்​பிடிப்​பில் ராம் சரண் காயம்

ப்ரியா

ராம் சரண் நடிக்​கும் ‘பெத்​தி’ படத்தை புச்சி பாபு சானா இயக்குகிறார். இதில் ஜான்வி கபூர் நாயகி​யாக நடிக்​கிறார்.

கன்னட நடிகர் சிவ ராஜ்கு​மார், ஜெகபதி பாபு, திவ்​யந்து ஷர்​மா, போமன் இரானி ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்​றனர். விருத்தி சினி​மாஸ் சார்​பில் வெங்கட சதீஷ்கிலாரு தயாரிக்​கும் இப்​படத்​துக்கு ரத்​னவேலு ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைக்​கிறார்.

          

இந்​தப் படத்​துக்​காக ஆக் ஷன் காட்சி படப்​பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்​தது. அப்​போது எதிர்​பா​ராத வித​மாக ராம் சரணுக்கு கண் அருகே காயம் ஏற்​பட்​டது. உடனடி​யாக மருத்து​வ​மனை சென்ற அவருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. 2 நாட்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

“அவருக்கு ஏற்​பட்​டது லேசான காயம்​தான்; விரை​வில் குணமடைந்து படப்​பிடிப்​பில் பங்​கேற்​பார்” என்று படக்​குழு தெரிவித்​துள்​ளது. இந்த ஆக் ஷன் காட்​சியை அடுத்து பாடல் காட்சி ஒன்​றும் படமாக்​கப்பட இருக்​கிறது. அப்​பாடலில் மிருணாள் தாக்​குர் நடிக்க இருக்​கிறார்.

SCROLL FOR NEXT