தென்னிந்திய சினிமா

‘ஸ்​பிரிட்’​டில் இருந்து வில​கி​னார் பிர​காஷ் ராஜ்!

ப்ரியா

சந்​தீப் ரெட்டி வங்கா இயக்​கத்​தில் பிர​பாஸ் கதா​நாயக​னாக நடிக்கும் படம், ‘ஸ்​பிரிட்’. இதில் த்ரிப்தி திம்ரி நாயகி​யாக நடிக்கிறார். தென் கொரிய நடிகர் மா டாங்க் சியோக், விவேக் ஓபராய், காஞ்​சனா உள்பட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

தெலுங்​கு, தமிழ், இந்​தி, கொரியா உள்பட 8 மொழிகளில் உருவாகும் படம் இது. இதில் பிர​காஷ் ராஜ் முக்​கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்​தார். அவருக்​கும் இயக்​குநருக்​கும் கருத்து மோதல் ஏற்​பட்​ட​தாக​வும் படப்​பிடிப்​பில் வாக்​கு ​வாதத்​தில் ஈடு​பட்​ட​தாக​வும் இதனால் படத்​தில் இருந்து அவர் விலகிவிட்டதாக​வும் சில வாரங்​களுக்கு முன் கூறப்​பட்​டது. ஆனால், அதை அவர் மறுத்​திருந்​தார்.

“ஸ்​பிரிட் படத்​தில் இன்​னும் என் காட்​சிகளுக்​கான படப்​பிடிப்பு தொடங்​கவில்​லை. வாட்​ஸ்​-அப் தொழிற்​சாலைகள் கற்​பனை கதைகளைப் பரப்​பு​கின்​றன” என்று கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் ‘ஸ்பிரிட்’ படத்​தின் நடிகர்​கள் லிஸ்ட்​டில் அவர் பெயர் இடம்பெறவில்​லை. இதனால் அவர் படத்​தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்​படு​கிறது.

          
SCROLL FOR NEXT