தங்களுடைய ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி சமீபகாலமாக திரை பிரபலங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், நாகார்ஜுனா, சிரஞ்சீவி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் இது தொடர்பாக வழக்குத் தொடுத்து தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சமூக ஊடக தளங்கள், மின் வணிக வலைத்தளங்களில் தனது பெயர், புகைப்படங்கள், வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தனது தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாகும் என்று தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜுனியர் என்.டி.ஆர், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எனது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவு வழங்கியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.