கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, உமா ரியாஸ், பிரபாகர் உள்பட பலர் நடித்து 2022ல் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. இதை ராம்நாத் பழனிகுமார், இயக்கி இருந்தார். இவர் கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர், ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருந்த ‘ஆதார்’ படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றிருந்த இப்படம் இப்போது மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. ”ஆதார் படத்தை மலையாளத்தில் இயக்குகிறேன். யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தரமான படைப்புகளைக் கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார் ராம்நாத் பழனிகுமார்.