தென்னிந்திய சினிமா

ஹன்சிகாவின் ‘யட்சிணி’ படத்துக்காக ரூ.60 லட்​சத்​தில் மலைக்​குகை அரங்கு!

நிலா

ஹன்சிகா மோத்​வானி முதன்​மைப் பாத்​திரத்​தில் நடிக்​கும் ஹாரர் த்​ரில்​லர் திரைப்​படத்​துக்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்​ளது. ஆர்.கண்​ணன், தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்​தின் சார்​பில் தயாரித்து இயக்​கி​யுள்ள படத்​துக்கு ‘காந்தாரி’ என்று தலைப்பு வைத்​திருந்​தனர். இப்​போது ‘யட்சிணி’ என்று மாற்றியுள்​ளனர். இதில் ஹன்சிகா 2 வேடங்​களில் நடிக்கிறார்.

இதில் மெட்ரோ சிரிஷ், மயில்​சாமி, தலை​வாசல் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், வினோதினி, பவன், பிரி​கிடா சகா உள்​ளிட்​டோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். மா.தொல்​காப்​பியன் எழுதிய கதைக்கு ஜி.தனஞ்​செயன் திரைக்​கதை அமைத்​துள்​ளார். ஸ்ரீனி செல்​வ​ராஜ் வசனம் எழுதி​யுள்​ளார். பாலசுப்​ரமணி​யெம் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப் படத்​துக்கு எல்.வி.முத்​துகணேஷ் இசை அமைத்​துள்​ளார்.

“இதில் ஹன்​சிகா, இந்து அறநிலை​யத்​துறை அதி​காரி மற்​றும் நரிக்​குறவப் பெண் என 2 வேடங்​களில் நடித்​துள்​ளார். நரிக்குறவப் பெண்​ணாக நடிப்​ப​தற்​காக அந்​தச் சமூகத்​தினருடன் பழகி, அவர்​களின் வாழ்க்கை முறையை அறிந்து பயிற்​சி​யும் எடுத்​திருக்​கிறார்.

படத்​தின் முக்​கிய​மான காட்சிகளுக்​காகச் சென்னை கிழக்குக் கடற்​கரைச் சாலை​யில் சுமார் ரூ.60 லட்​சம் மதிப்​பில் மலைக் குகை அரங்கு அமைக்​கப்​பட்​டது. 1943-ம் ஆண்டில் நடை​பெறும் பின்​னணிக் காட்சிகள் இந்த அரங்​கில் படமாக்​கப்​பட்டுள்​ளன. முழுப் படப்​பி​டிப்பும் நிறைவடைந்​துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடை பெற்று வரு​கின்​றன. டிசம்பரில் வெளியாகும்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இப்படத்தின் தலைப்பு கேரளாவின் சோட்​டானிக்​கரா கோயி​லில் வெளியிடப்பட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT