ராம் சரண் 
தென்னிந்திய சினிமா

ராம் சரண் தயாரிக்கும் தி இண்டியா ஹவுஸ்

செய்திப்பிரிவு

நடிகர் ராம் சரண், தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸின் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘தி இண்டியா ஹவுஸ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதை ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’ படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் தயாரிக்கிறார்.

‘தி இண்டியா ஹவுஸ்’ படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா, மூத்த நடிகர் அனுபம் கெர் உட்பட பலர் நடிக்கின்றனர். வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT