தமன்னா 
தென்னிந்திய சினிமா

ஒரு பாடலுக்கு ஆட தமன்னா ரூ.5 கோடி கேட்டாரா?

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ள அவர் தெலுங்கில், அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரூ.5 கோடி கேட்டதாகவும், இதனால் அவரை நிராகரித்து விட்டதாகவும் செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தமன்னா, “அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கும். பாலகிருஷ்ணா மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அவர்கள் படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆடுவது பற்றிய ஆதாரமற்ற செய்திகளை படிக்கும்போது, வருத்தமாக இருக்கிறது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன்பு தயவுசெய்து, உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT