தென்னிந்திய சினிமா

‘காயம்குளம் கொச்சுன்னி’ படத்துக்காக களரி கற்கும் நிவின் பாலி

ஐஏஎன்எஸ்

‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படத்துக்காக நடிகர் நிவின் பாலி களரி பயிற்சி மேற்கொள்கிறார். கேரளத்தின் பண்டைய தற்காப்பு கலையான இது படத்தின் முக்கியப்பகுதியாக இருக்கும் என கூறப்படுகிறது.

19ம் நூற்றாண்டில், வழிப்பறி கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கொச்சுன்னி என்ற உண்மையான கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. அவர் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத் தந்ததாகக் கூறப்படுகிறது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். அமலாபால் நாயகியாக நடிக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக மங்களூரில் படப்பிடிப்பு நடக்கிறது. மஞ்சேஷ்வர், உடுப்பி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ளது. தினமும் காலை படப்பிடிப்புக்கு முன் நிவின் களரி பயிற்சி மேற்கொள்கிறார். இதற்காக களரி பயிற்றுவிக்கும் நிபுணர்கள் படப்பிடிப்பு குழுவுடன் இணைந்துள்ளனர்.

அடுத்து நிவின் பாலி ‘கைரலி’ என்ற படத்தில் நடிக்கிறார். மர்மமான முறையில் காணாமல் போன கேரள கப்பல் துறையின் கப்பல் பற்றிய படம் இது.

SCROLL FOR NEXT