தமிழில், சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை அடா சர்மா. தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’படத்திலும் நடித்துள் ளார். இந்தப் படத்துக்காக அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விபத்தில் அவர்லேசான காயமடைந்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் கூறியுள்ள அவர், “தற்போது நான் உட்பட படக்குழுவினர் நலமாக இருக்கிறோம். பயப்படும்படி ஒன்றுமில்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.