தென்னிந்திய சினிமா

‘இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘டபுள் இஸ்மார்ட்’ - அடுத்த ஆண்டு வெளியாகிறது

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பூரி ஜெகன்நாத் - ராம் பொத்தினேனி கூட்டணி தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘இஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ராம் பொத்தினேனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது.

இந்த நிலையில் 'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் இப்படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT