தென்னிந்திய சினிமா

சமூக ஊடகத்தில் இருந்து நஸ்ரியா திடீர் விலகல்

செய்திப்பிரிவு

‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, இப்போது திடீரென அதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் திரும்பி வருவேன் எனக் கூறியுள்ள அவர், விலகலுக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT