சமந்தா | கோப்புப்படம் 
தென்னிந்திய சினிமா

புது வீடு வாங்கினாரா சமந்தா?

செய்திப்பிரிவு

நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டீகே இயக்கும் ‘சிட்டாடெல்’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளிவரவிருக்கிறது. சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் வீட்டை முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா, ஹைதராபாத்தின் ஜெயபேரி ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் புதிய வீடு வாங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த இரட்டை தள வீடு, 13 மற்றும் 14 வது தளத்தில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT