சமந்தா | கோப்புப்படம் 
தென்னிந்திய சினிமா

சிட்டாடெல் ரீமேக்கா? - சமந்தா மறுப்பு

செய்திப்பிரிவு

ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள வெப்தொடர், ‘சிட்டாடெல்’. ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள இந்த ஸ்பை தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வாரம் ஒரு எபிசோடாக வெளியாகி வருகிறது. இதன் இந்திய பதிப்பில் சமந்தாவும், இந்தி நடிகர் வருண் தவானும் நடித்து வருகின்றனர். இது பிரியங்கா சோப்ரா நடிக்கும் தொடரின் ரீமேக் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இரண்டும் ஒரே கதையா? ரீமேக்கா? என்று சமூகவலைதளப் பக்கத்தில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள சமந்தா, தான் நடிப்பது அந்த தொடரின் ரீமேக் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை ராஜ் மற்றும் டீகே இயக்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT