நடிகை அமலா 
தென்னிந்திய சினிமா

'ஏஜென்ட்' பற்றி விமர்சனம்: நடிகை அமலா பதிலடி

செய்திப்பிரிவு

நடிகர் நாகர்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகன் அகில். இவர் நடித்த ‘ஏஜென்ட்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஸ்பை த்ரில்லர் படமான இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால், வலுவில்லாத கதை, பொருத்தமில்லாத இடத்தில் பாடல் காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாகச் சாடியிருந்தனர். இந்நிலையில் நடிகை அமலா, விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, “ட்ரோல் என்பது, பாதுகாப்பின்மை மற்றும் சாதிக்க வேண்டும் என்ற தேவையின் காரணமாக வருகிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ‘ஏஜென்ட்’ படத்தைப் பார்த்தேன். ரசித்தேன். குறைபாடுகள் இருந்தாலும் திறந்த மனதுடன் பார்த்தால், நீங்கள் வியப்பீர்கள். நான் பார்த்த திரையரங்கில் ஏராளமானப் பெண்கள், தங்கள் தாய் மற்றும் குடும்பமாக வந்து பார்த்தார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் கைதட்டல்கள் கேட்டன” என்று தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT