மம்மூட்டி தனது தாயாருடன் 
தென்னிந்திய சினிமா

நடிகர் மம்மூட்டியின் தாயார் காலமானார்

செய்திப்பிரிவு

கொச்சின்: இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார். அவருக்கு வயது 93. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் காலமானார்.

வயது மூப்பால் நோய்க்கு ஆளான அவர் அதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி உள்ளார். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அவர் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு கொச்சினுக்கு பக்கத்தில் உள்ள செம்பு கிராமத்தில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT