சிறந்த நடிப்பிற்காகத் தேசிய விருதைப் பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள அவர், ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் ‘வீரசிவாஜி’ படத்திலும் நடித்தார். மலையாளத்திலும் நடித்து வரும் அவர் ஓவியம், நாட்டியத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் பெண்கள், சமூக தளைகளிலிருந்து விடுபட்டு, இலட்சியம் நோக்கி நகரும் வகையில் வரையப்பட்டுள்ளது. அவர் தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு, சென்னை, பெங்களூரில் ஓவிய கண்காட்சியை நடத்தி இருந்தார். இப்போது துபாயில் ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில், பார்வையாளர்களுக்கு சமீபத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். இக்காட்சியில் ஏராளமான வெளிநாட்டினர், தனது படைப்புகளைப் பாராட்டியதாக ஷாம்லி தெரிவித்துள்ளார்.