ரஜினிகாந்த் | கோப்புப்படம் 
தென்னிந்திய சினிமா

ரஜினியை இயக்குகிறார் தெலுங்கு இயக்குநர்!

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, ஐஸ்வர்யா நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் பாபி இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இவர் சிரஞ்சீவி நடித்து வெற்றிபெற்ற ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கியவர். அவர் சொன்ன மாஸ் ஆக்‌ஷன் கதை ரஜினிக்கு பிடித்திருப்பதால் அவர் நடிக்க ஓகே சொன்னதாகவும் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இதை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT