ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கில் உருவான படம், ‘சீதா ராமம்’. துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் இந்தியில் டப் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு மிருணாள் தாக்குருக்குத் தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்புக் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்தார் மிருணாள். அப்போது ‘சீதா ராமம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எனக்கு அதுபற்றிய ஐடியா இல்லை. இரண்டாம் பாகம் உருவானால், அதில் நானும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.