தென்னிந்திய சினிமா

மனைவியை பிரிந்தார் மலையாள நடிகர் விநாயகன்

செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ஆர்.கே.நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தியின் ‘சிறுத்தை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இப்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர், மனைவி பபிதாவைப் பிரிந்துவிட்டதாக, தனது சமூக வலைதளப் பக்கத்தின் நேரலையில் தோன்றி தெரிவித்துள்ளார்.

“எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான திருமண உறவு இப்போதிருந்து முடிவுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார். பபிதா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

SCROLL FOR NEXT