தென்னிந்திய சினிமா

ராஜமவுலி, கீரவாணிக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணி, அவர் மனைவி வள்ளி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அவர் மனைவி ரமா, பாடகர் காலபைரவா, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று காலை ஹைதராபாத் திரும்பினர்.

விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வெளியே குவிந்த ரசிகர்களிடம் ராஜமவுலி ‘ஜெய்ஹிந்த்’ என கூறிவிட்டுப் புறப்பட்டார்.

SCROLL FOR NEXT