தென்னிந்திய சினிமா

உபேந்திராவின் எளிமை - ஸ்ரேயா வியப்பு

செய்திப்பிரிவு

உபேந்திராவுடன் நடிகை ஸ்ரேயா நடித்துள்ள ‘கப்ஜா’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சந்துரு இயக்கியுள்ள இந்தப் பான் இந்தியா படம் பற்றி ஸ்ரேயா கூறியதாவது:

நான் இந்தப் படத்தில் மதுமதி என்ற இளவரசியாக நடித்திருக்கிறேன். இது கேங்ஸ்டர் படம் என்றாலும் எமோஷனலான காட்சிகளும் இருக்கிறது. அது ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கும். இதில் கதக் நடனம் ஆடியிருக்கிறேன். இயக்குநர் இதன் கதையை சொன்னபோது, என் கேரக்டரை தாண்டி, அவர் கண்களில் இருந்த ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்தேன். இந்தப் படம் பிரம்மாண்டமாக வரும் என்பதைப் புரிந்தேன். அப்படியே வந்திருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.

பான் இந்தியா குறித்து பேசுகிறார்கள். நான் தூர்தர்ஷன் காலத்தைச் சேர்ந்தவள். இப்போது எல்லாமே ஒன்றாகிவிட்டது. பான் இந்தியா என்ற பெயரில், திரைப்படங்கள் மூலம் நாடு ஒன்றிணைவது நல்ல விஷயம்தான். உபேந்திரா திறமையான நடிகர். அவரின் எளிமையை கண்டு வியந்தேன். அவர் இயக்கத்தில் நடிக்கும் ஆசையும் இருக்கிறது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

SCROLL FOR NEXT