தென்னிந்திய சினிமா

சினிமா படப்பிடிப்பில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பு பொருட்கள் சாம்பல்

செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் இப்போது ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜிதின் லால் இயக்கும் இதில் அவர் 3 வேடத்தில் நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பு காசர்கோடு அருகில் உள்ள சீமேனியில் அரங்கம் அமைத்து நடந்து வந்தது. நேற்று முன்தினம் அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரங்கப் பொருட்கள் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பு நிர்வாகி பிரின்ஸ் ரபேல் கூறும்போது, “உடனடி நடவடிக்கையில் இறங்கியதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. இன்னும் 10 நாள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், இந்த தீ விபத்து காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT