தென்னிந்திய சினிமா

ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஜான்வி - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இந்தியில் நடித்து வரும் அவர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாவதாகக் கூறப்பட்டது.

அவர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜான்வியின் 26-வது பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT