தென்னிந்திய சினிமா

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை புகழ்ந்த ‘பிடிஎஸ்’ இசைக்குழுவின் ஜங்குக் - தென்கொரியாவில் படத்துக்கு வரவேற்பு

செய்திப்பிரிவு

‘பிடிஎஸ்’ இசைக்குழுவின் ஜங்குக் என்பவர் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்து புகழ்ந்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈர்த்த இப்படம் அண்மையில் கோல்டன் க்ளோப் விருதை தட்டிச்சென்றது.

அடுத்து ‘ஆஸ்கர்’ விருதுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவை பின்புலமாகக் கொண்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் ரசிகர்களை வென்றிருக்கும் பிடிஎஸ் குழுவினராலும் ஆர்ஆர்ஆர் சிலாகிக்கப்பட்டது. பிடிஎஸ் அங்கத்தினர்களில் ஒருவரான பாடகர் ஜங்குக், லைவ் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் குறித்தும், அதன் ’நாட்டு... நாட்டு’ பாடல் குறித்தும் புகழ்ந்துள்ளார்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாயிலாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் காணக்கிடைப்பதால், அதுமுதல் தென்கொரியாவின் நெட்ஃபிளிக்ஸ் டாப் திரைப்படங்களின் வரிசையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிரடியாக இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.

SCROLL FOR NEXT