மனோஜ், மவுனிகா 
தென்னிந்திய சினிமா

எளிமையாக நடந்தது மனோஜ் மன்சு 2 வது திருமணம்

செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன், மனோஜ் மன்சு. தெலுங்கு ஹீரோவான இவர், கடந்த 2019-ம் ஆண்டு மனைவி பிரணதியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

பின்னர் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவருக்கும் ஆந்திர அரசியல்வாதி பூமா நாகிரெட்டி மகள் பூமா மவுனிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் திருமணம் வெள்ளிக்கிழமை ஹைதராபாத் பிலிம்நகரில் உள்ள மனோஜ் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT