தென்னிந்திய சினிமா

முதல்முறையாக நடிகைகளுக்கென தனி அமைப்பு: மலையாள நடிகைகள் முயற்சி

கார்த்திக் கிருஷ்ணா

நாட்டில் முதல்முறையாக நடிகைகளின் பாதுகாப்புக்கென ஒரு அமைப்பு மலையாள திரையுலகில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நடிகைகள் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், பீனா பால் உள்ளிட்டோர் இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளனர்.

நடிகைகளின் பாதுகாப்பு குறித்து நீண்ட காலமாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பலரது கவனத்தைப் பெற்றது. நடிகைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளன என திரையுலகிலிருந்தே பல குரல்கள் எழுந்தது.

இந்த நிலையில், தற்போது நாட்டில் முதல்முறையாக, மலையாள நடிகைகள் சேர்ந்து ஒரு அமைப்பை தொடங்கியிருக்கின்றனர். வுமன்ஸ் கலெக்டிவ் இன் சினிமா என்ற இந்த அமைப்பு நடிகைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர், பீனா பால், பார்வதி, விது வின்சண்ட், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளனர். இவர்கள் வியாழக்கிழமை மாலை கேரள முதல்வரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT