தென்னிந்திய சினிமா

பி.எம்.டபிள்யூ பைக் வாங்கினார் மஞ்சு வாரியர்

செய்திப்பிரிவு

மலையாள நடிகை மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில், அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்டார். வட இந்தியாவில் அவர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர்முறைப்படி இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றார். இப்போது அவர்புதிதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். கொச்சியில் உள்ள ஷோரூம் ஒன்றில் அவர் அதை வாங்கி, ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஒரு நல்ல ரைடர் ஆகும் முன் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதைக் கண்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிக்கும் நடிகர் அஜித்துக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் பதிவும் வேகமாகப் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT