நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயரைக் காதலித்து வருகிறார்.
இருவரும் ஒன்றாக துபாய் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்ற புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் காதலர் தினமான நேற்று, தனது காதலை காளிதாஸ் ஜெயராம் உறுதிப்படுத்தியுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில், நான் தற்போது தனியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தாரிணி காலிங்கராயரை டேக் செய்துள்ளார். இதையடுத்து அவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.