தென்னிந்திய சினிமா

பாகுபலி கதாநாயகன் பிரபாஸை திருமணம் செய்ய 6,000 பேர் போட்டி

செய்திப்பிரிவு

பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸை திருமணம் செய்ய 6 ஆயிரம் பெண்கள் போட்டி போடுகின்றனர்.

பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் கதாநாயகனான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு இவரை திருமணம் செய்ய பலர் முன் வந்துள்ளனர். ஏற்கெனவே இவர்களது வீட்டார் இவருக்கு பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இவர் பாகுபலி படத்தில் நடிப்பதற்காக 5 ஆண்டுகள் வரை வேறு எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருந்தார். ஆனால் தற்போது இவரை திருமணம் செய்ய கொள்ள சுமார் 6,000 பெண்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண தகவல் மையங்கள் மூலம் இவர்கள் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT