தென்னிந்திய சினிமா

பான் இந்தியா படத்தில் வெங்கடேஷ்

செய்திப்பிரிவு

தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்துக்கு ‘சைந்தவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை சைலேஷ் கொலனு இயக்குகிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT