தென்னிந்திய சினிமா

130 பேருக்கு தங்க காசு - கீர்த்தி சுரேஷ் பரிசு

செய்திப்பிரிவு

நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஜோடியாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து ‘சைரன்’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’ படத்தில் நடித்து வரும் அவர், நானி ஜோடியாக ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. நிறைவு நாளன்று படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக் காசு பரிசளித்திருக்கிறார். இதனால், சமூக வலைதளங்களில் அவரை, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT