நாட்டுக் கூத்து பாடல் போஸ்டர் மற்றும் கோல்டன் குளோப் விருதுடன் கீரவாணி 
தென்னிந்திய சினிமா

நாட்டுக் கூத்து கொண்டாட்ட ரகப் பாடல்: கோல்டன் குளோப் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 1962 முதலில் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் முதல் விருதை வென்ற இந்திய சினிமா என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் படக்குழு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தார்.

நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும்.

இந்த சூழலில் கோல்டன் குளோப் விருதை வென்றதும் இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்தது. “நாட்டுக் கூத்து ஒரு கொண்டாட்ட ரகப் பாடல். முழுக்க முழுக்க எனர்ஜி மற்றும் ஸ்டாமினாவை இந்த பாடலில் நாங்கள் வெளிப்படுத்த விரும்பினோம். இந்த மாபெரும் விருதை நான் வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதின் மூலம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சர்வதேச பார்வையை ஈர்த்துள்ளது. அதை எண்ணி நான் மகிழ்கிறேன். ஆர்ஆர்ஆர் படக் குழுவினருக்கு எனது நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் சொல்லியுள்ளார்.

SCROLL FOR NEXT