தென்னிந்திய சினிமா

இயக்குநர் ரோஹித் ஷெட்டி காயம்

செய்திப்பிரிவு

பிரபல இந்திப் பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இவர் ‘கோல்மால்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’, ‘தில்வாலே’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இப்போது அமேசான் பிரைம் தளத்துக்காக, ‘இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்’ என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட கார் விபத்தில் ரோஹித் ஷெட்டியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய 2 விரல்களில் தையல் போடப்பட்டது. மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT