தென்னிந்திய சினிமா

கீர்த்தி சனோனை காதலிக்கிறேனா? - ‘பழைய செய்தி’ என்கிறார் பிரபாஸ்

செய்திப்பிரிவு

நடிகர் பிரபாஸும் இந்தி நடிகை கீர்த்தி சனோனும் ‘ஆதி புருஷ்’படத்தில் ராமன், சீதையாக நடித்துள்ளனர். இந்நிலையில் கீர்த்தி சனோனை பிரபாஸ் காதலிப்பதாகக் கூறப்பட்டது. அதை கீர்த்தி மறுத்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஓடிடி தளம் ஒன்றுக்காக நடத்தும் நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்துகொண்டார். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “அது பழைய செய்தி. அதுபற்றி ‘மேடம்’ (கீர்த்தி) விளக்கம் அளித்துவிட்டார்கள்” என்றார்.

பின்னர் பிரபாஸின் நண்பர் ராம்சரணுக்கு நிகழ்ச்சியின் போதே போன் செய்து பிரபாஸின் காதல் வாழ்க்கை பற்றி கேட்டபோது, ‘அவர் வாழ்வில் இப்போதைக்கு எந்தப் பெண்ணும் இல்லை’ என்று ராம் சரண் தெரிவித்தார். பின்னர் பேசிய பிரபாஸ், “நான் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொள்வேன், எப்போது என்றுதான் தெரியவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT