தென்னிந்திய சினிமா

விமானி அறைக்குள் நுழைந்த ‘பீஸ்ட்’ நடிகர்: ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு 

செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர், தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தார். இவர் இப்போது ‘பாரத சர்க்கஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஷைன்டாம் சாக்கோ உட்பட படக்குழுவினர் துபாய் சென்றிருந்தனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சி திரும்பினர்.

அப்போது நடிகர் ஷைன் டாம், விமானியின் அறைக்குள் திடீரென நுழைய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானப் பணியாளர்கள், துபாய் குடிவரவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அவரை, விமானத்தில் இருந்து வெளியேற்றினர். அவர் இல்லாமல் மற்ற நடிகர், நடிகைகளுடன் அந்த விமானம் கொச்சி திரும்பியது.

வேடிக்கைக்காக விமானி அறைக்குள் நுழைய முயன்றதாகவும் பிரச்னையை ஏற்படுத்தவில்லை என்றும் ஷைன் டாம் கூறினார். விசாரணைக்குப் பிறகு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

SCROLL FOR NEXT