தென்னிந்திய சினிமா

ஒரே வருடத்தில் 9 படங்கள் - ஐஸ்வர்யா லட்சுமி மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

இந்தாண்டு 9 திரைப்படங்களில் நடிதுதள்ளது மன நிறைவை தந்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து ‘ஜகமே தந்திரம்’ உட்பட சில படங்களில் நடித்த அவர், இந்த வருடத்தில் 9 படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, ‘புத்தம் புது காலை விடியாதா’, ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ (மலையாளம்), ‘கோட்சே’ (தெலுங்கு), ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘கட்டா குஸ்தி’, ‘அம்மு’ (தெலுங்கு), ‘குமாரி’ (மலையாளம்) ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் தனக்கு மனநிறைவை தந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT