தென்னிந்திய சினிமா

தள்ளிப் போகிறது பிரியா பவானி சங்கரின் வெப் தொடர்

செய்திப்பிரிவு

இயக்குநர் விக்ரம் குமார் இயக்கும் வெப் தொடர் ‘தூதா’. அமேசான் தளத்துக்காக உருவாகியுள்ள இந்த தொடரில், நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார். இதில், பிரியா பவானி சங்கர், ‘பூ’ பார்வதி, பிராச்சி தேசாய், தருண் பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கில் உருவாகும் ‘தூதா’ தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.

இந்த தொடரை இம்மாதம் வெளியிட அமேசான் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் சில காட்சிகளை ‘ரீ ஷூட்’ செய்ய இருப்பதால், இதன் வெளியீடு, அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போயிருக்கிறது.

SCROLL FOR NEXT