தென்னிந்திய சினிமா

பிரபாஸுடன் காதலா? - விளக்கிய கீர்த்தி சனோன்

செய்திப்பிரிவு

நடிகர் பிரபாஸும், இந்தி நடிகை கீர்த்தி சனோனும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். இவர்கள் காதலிப்பதாகத் திடீரென சில நாட்களுக்கு முன் செய்திகள் பரவியது. வருண் தவணுடன் ‘பெடியா’ என்ற படத்திலும் கீர்த்தி சனோன் நடித்துள்ளார். அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வருண், “ கீர்த்தி சனோன் மனதில் இருப்பவர் தற்போது தீபிகா படுகோனுடன் படப்பிடிப்பில் இருக்கிறார்” என்று கூறினார்.

பிரபாஸ், தீபிகா படுகோனுடன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருவதால், பிரபாஸ் - கீர்த்தி காதல் உண்மை என பதிவிட்டு, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், இதை மறுத்துள்ள கீர்த்தி சனோன், தன்னைப் பற்றி வரும் காதல் செய்தியில் உண்மையில்லை என்றும் அவை வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT