நடிகர் ராணா மறுப்பு: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்நடித்து வருகிறார், ராணா. இவரும் மிஹிகா பஜாஜ் என்பவரும் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் மிஹிகா, தாய்மை அடைந்திருப்பதாகவும் இருவரும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. ஆனால், இதை நடிகர் ராணா மறுத்துள்ளார்.
பெடியா படத்தை வெளியிடுகிறது ஸ்டூடியோ கிரீன்: வருண் தவண் நடித்துள்ள இந்தி படம், ‘பெடியா’ (ஓநாய்). கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால், அபிஷேக் பானர்ஜி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 25-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியாகிறது. அமர் கெளஷிக் இயக்கியுள்ள இந்தப் படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.