தென்னிந்திய சினிமா

தமிழில் ரீமேக் ஆகிறது முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் சமீபத்தில் நடித்து வெளியான படம், ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’. இதை அபினவ் சுந்தர் நாயக் இயக்கி உள்ளார். மலையாளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. இதை தெரிவித்துள்ள அபினவ் சுந்தர், யார் நடிக்கிறார், தயாரிக்கிறார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

இதற்கிடையே இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக வினீத் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT