‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி, அடுத்து இயக்கும் படம், ‘காதல் தி கோர்’. மம்முட்டி தயாரித்து நடிக்கும் இதில் அவர் ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இதையடுத்து இந்தி படம் ஒன்றில் நடிக்கிறார் ஜோதிகா.
ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபரும் பொல்லன்ட் இன்ஸ்டஸ்ட்ரீஸ் அதிபருமான காந்த் பொல்லாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ், ஸ்ரீகாந்த் பொல்லாவாக நடிக்கிறார். இதில் ஜோதிகாவும் இந்தி நடிகை ஆலயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். துஷார் ஹிராநந்தினி இயக்குகிறார்.