துல்கர் சல்மான் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான, ‘சீதாராமம்’ சூப்பர் ஹிட்டானது. தெலுங்கில் உருவான இந்தப் படம், தமிழ், இந்தியிலும் வெற்றி பெற்றது. இதில் மிருணாள் தாகூர் நாயகியாகவும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். இப்போது ‘கிங்க் ஆப் கோதா’ படத்தில் நடித்துவருகிறார் துல்கர்.
இந்நிலையில், அவர் 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளார். ஆஸ்டர் மெட்சிட்டி, கைட்ஸ் அறக்கட்டளை மற்றும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. துல்கரின் இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.