தென்னிந்திய சினிமா

அர்ப்பணிப்பு இல்லையா? - நடிகர் அர்ஜுன் புகாருக்கு விஷ்வக் சென் விளக்கம்

செய்திப்பிரிவு

நடிகர் அர்ஜுன், தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தைத் தயாரித்து இயக்க இருந்தார். இந்தப் படத்தின் மூலம், அவர் மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக, படப்பிடிப்பில் விஷ்வக் சென் பங்கேற்கவில்லை. இதனால், நடிகர் அர்ஜுன் அவர் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். அர்ப்பணிப்பு இல்லாத நடிகர் என்றும் எத்தனை கோடி கொடுத்தாலும் அவரை வைத்து இனி இயக்கமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலளித்துள்ள விஷ்வக் சென், “கதையில் சில மாற்றங்களைப் பரிந்துரைத்தேன். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் அர்ஜுன் இல்லை. நான் சொன்ன 10 பரிந்துரைகளில் இரண்டை ஏற்றிருந்தாலும் நான் நடித்திருப்பேன். என் நிலைமை, விருப்பமில்லாத திருமணத்துக்கு நிகராகவே இருந்தது. பிரச்னைகள் பற்றிப் பேச தயாராகவே இருந்தேன். அதற்குள் அவர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி என்னைப் பற்றி புகார் கூறியிருக்கிறார். படத்தில் இருந்து நானாக விலகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT