தென்னிந்திய சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுன்

ஸ்கிரீனன்

மணிரத்னம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் மகேஷ் பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'கடல்' படுதோல்வியைச் சந்தித்தது. அப்படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.

புதிய படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், படக்குழு எந்த ஒரு செய்தியையும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் வீடியோ பேட்டி ஒன்றில் சுஹாசினி மணிரத்னத்திடம், மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு "தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாராகும் படம் ஒன்றினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். ஜுன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆங்கிலத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மிஷன் இம்பாஸிபுள்' மற்றும் 'பார்ன் ஐடிண்ட்டி' வகையான கதையாகும். இப்படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் " என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT