தென்னிந்திய சினிமா

ஜப்பானில் சாதிக்கும் ஆர்ஆர்ஆர்

செய்திப்பிரிவு

சமீப காலமாக இந்திய படங்களை ஜப்பானில் டப் செய்து வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ரஜினியின் ‘முத்து’ படம் அங்கு அதிக வரவேற்பைப் பெற்றது. ஜப்பானில் அதிகம் வசூல் செய்த (ரூ.22 கோடி) இந்திய படமாக அது இருக்கிறது. கார்த்தி நடித்த ‘கைதி’யும் அங்கு வெளியிடப்பட்டது. ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் அங்கு வெளியானது.

இந்தப் படத்தை ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஜப்பானில் புரமோஷன் செய்தனர். இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ஜப்பானில் ஒரு இந்திய படத்தின் அதிகப்பட்ச முதல் வார வசூல் இது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் ஜப்பானிய மொழியில் டப் செய்து அடுத்த மாதம் வெளியிட உள்ளனர்.

SCROLL FOR NEXT